யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றும் சில குருக்களுக்கான பணி மாற்றங்கள்
யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றும் சில குருக்களுக்கான பணி மாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
மறையாசிரியர்களுக்கான ஒரு மாத வதிவிடப் பயிற்சி
மன்னார் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள மடுத்திருத்தலத்தில் யூலை மாதம் 03திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 03திகதி வரை நான்கு தமிழ் மறை மாவட்டங்களையும் இணைத்த மறையாசிரியர்களுக்கான ஒரு மாத வதிவிடப் பயிற்சியை நடாத்துவதற்கு வடக்கு கிழக்கு ஆயர்கள் மன்றம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறை
முழங்காவில் பங்கிலுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும், மறை ஆசிரியர்களுக்கான பாட ஆயத்தங்கள், கற்பித்தல் தொடர்பான கருத்தமர்வும் 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரணை மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையினர் நூற்றாண்டு விழா
இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி வரும் அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையினர் இலங்கையின் தமது பணியை ஆரம்பித்ததன் நூற்றாண்டு விழாவை 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினர்.
மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனர் யாழ் மறை மாவட்டத்திற்கு வருகை
மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனர் அருட்திரு பசில் றொகான் அவர்கள் திருப்பாலத்துவசபை தினத்தை தேசியரீதியில் சிறப்பிக்குமுகமாக யாழ் மறை மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தார்.