களஅனுபவ பயணம்

முல்லைத்தீவு பங்கிலுள்ள மரியாயின் சேனையினர் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் களஅனுபவ பயணமென்றை 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

பொதுநிலையினர் கழகக் கூட்டம்

கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு செபஜீவன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.

தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா

பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 11ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.

உலக நோயுற்றோர் தினம்

30வது உலக நோயுற்றோர் தினத்தை முன்னிட்டு. “உலக நோயுற்றோர் தினம் பொருள், இலக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில், மனித ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வலைத்தள கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைந்து உரையாற்றினார்.