இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம்
இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கூட்டம்
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட குருக்களுக்கான கூட்டம் கடந்த மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள்
புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் 03ஆம் திகதி சனிக்கிழமை பீடப்பணியாளர்களுக்கான தீப்பாசாறை நிகழ்வும் தொடர்ந்து 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூதாளர்…
குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் இரணைமாதா நகர் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இணைப்பாளர்…
தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா
தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
