வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர கிறிஸ்தவ நாகரிகம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நவம்பர் மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
மாகாண கல்வி திணைக்கள சமயபாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி யோகினி சுதர்சன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மற்றும் வலிகாம ஆசிரிய ஆலோசகர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் இடம்பெற்ற இக்கருத்தமர்வை கிழக்கு பல்கலைக்கழக கிறிஸ்தவத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் அருட்தந்தை நவரட்ணம் நவாஜி அவர்களும் கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி ஆசிரியர் திரு. றங்கநாயகம் அவர்களும் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்தினர்.
இக்கருத்தமர்வில் வடமாகாணத்தில் கற்பிக்கும் 50 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

