சில்லாலை புனித கதிரை மாதா முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் கலாச்சார விழாவும் நவம்பர் மாதம் 10 திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் பொறுப்பாசிரியர்கள் ஆன் நிரோசா மற்றும் வேர்ஜின் லக்சிகா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறார்களால் நான்கு சமயங்களின் சமய சடங்கு முறைகளும் நடித்துக்காட்டப்பட்டன.
இந்நிகழ்வில் சில்லாலை றோ.க பாடசாலை ஆசிரியர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

