முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு கழகத்தின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. எசார்வே அவர்கள் கலந்து ‘பொதுநிலையினரின் அழைப்பும் பணிகளும்’ என்னும் தலைப்பிலும் செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் அவர்கள் கலந்து ‘கூட்டொருங்கியக்கத் திரு அவையாக உருவாக பொதுநிலையினரின் பங்களிப்பு’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள்.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல், சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் மற்றும் கழக அங்கத்தவர்களென 50 பேர் பங்குபற்றியிருந்தனர்.

By admin