யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினர் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித கொஞ்சேஞ்சி மாதா மறுவாழ்வு முற்றத்தில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

குழு காப்பாளர் அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்களின் வழிகாட்டுதலில் அருட்சகோதரன் இருதய வினோதன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் 35 அருட்சகோதரர்கள் இணைந்து யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா மறுவாழ்வு முற்றத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்தனர்.

By admin