இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யூதாததேயு ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அன்னாள் ஆலயத்தினூடாக இளவாலை இறையிரக்க ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.
நற்கருணை வழிபாட்டை திருவுள சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

