Institute of Martial Arts நிறுவனத்தினால், மாஸ்டர் பொன்னே ரொபர்ட்ஸ் அவர்களின் நினைவாக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச கராத்தே சம்பியன்சிப் போட்டி ஒக்டோபர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கலந்துகொண்ட பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்கள் இருவர் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு நவம்பர் மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் அருட்தந்தை மெல்வின் ரோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கராத்தே பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

By admin