கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி வெற்றிலைக்கேணி வியாகுலமாதா ஆலயத்தில் ஆரம்பமாகி கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தைச் சென்றடைந்து அங்கு செபமாலைதாசர் சபை அருட்தந்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இச்செபமாலை பவனியை பங்கின் மரியாயின் சேனையினர் நெறிப்படுத்தியதுடன் இப்பேரணியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin