அல்லைப்பிட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் போர்த்துக்கலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித பற்றிமா அன்னையின் திருச்சொருபமும் அன்பியங்களுக்கு வழங்கப்பட்ட அன்னையின் திருச்சொருபங்களும் அல்லைப்பிட்டி கடல்வழியாக பவனியாக எடுத்துவரப்பட்டன.
தொடர்ந்து அல்லைப்பிட்டி கடற்கரையிலிருந்து புனித கார்மேல் அன்னை ஆலயம் வரை அன்னையின் திருச்சொருப பவனியும் பவனி நிறைவில் திருப்பலியும் அன்பிய விருந்தும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

