நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி செருக்கஞ்சந்தி வேளாங்கன்னி அன்னை வரவேற்பு திருச்சொருபத்தில் ஆரம்பமாகி புனித பேதுரு பவுல் ஆலயத்தைச் சென்றடைந்து அங்கு பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர் இடம்பெற்றதுடன் பவனியில் சிறார்கள் மரியன்னையின் வேடம்தரித்து பங்குபற்றியிருந்தனர்.

By admin