நெதர்லாந்து தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்கைண்டல் நகரில் நடைபெறவுள்ளது.

“புலம்பெயர் இருகலாச்சார வாழ்வில் இளையோரின் ஆன்மீகம்” என்னும் தொனிப்பொருளில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு திருப்பலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, மாலை 4.30 மணிக்கு மேய்ப்புப் பணி ஒன்றுகூடல் கருத்தரங்கும், மாலை 7 மணிக்கு ஒன்றிணைந்த இராப்போசனமும் நடைபெறவுள்ளன.

நெதர்லாந்தில் வாழும் தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வை வலுப்படுத்தி இளையோர் மற்றும் குடும்பங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இளையோர் மற்றும் இளம் குடும்பத்தினருக்கு நெதர்லாந்து தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin