பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 32ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பீடப்பணியாளர் திருவிழாவும் பணியக இயக்குனர் அருட்தந்தை போல் மத்தியூஸ் மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் கொன்கோட் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

திருப்பலியை பரிஸ் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை எஸ்குடியர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் 18 பணித்தளங்களையும் சேர்ந்த இறைமக்கள் பலரும் கலந்து செபித்தனர்.

By admin