மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் மியன்மார் நாட்டிலிருந்து வருகைதந்த ஆயர்கள் மற்றும் பௌத்த குருமார் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினருடனான சிறப்புக் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில், நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் சமயத் தலைவர்கள் மற்றும் பொதுநிலையினருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தில் குருக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் மறைமாவட்டக் குருக்கள், துறவற சபைக் குருக்கள், பௌத்த குருமார், ஏனைய மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடல்களில் இலங்கையில் மதங்களுக்கிடையிலான உரையாடலின் தற்போதைய நிலைமைகள், மதங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

By admin