இளவாலை புனித யூதாததேயு ஆலய ஐப்பசி மாத திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

22ஆம் திகதி வியாழக்கிழமை வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரன் யேசுதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

அத்துடன் திருவிழா திருப்பலியில் 17 பிள்ளைகளிற்கு முதல்நன்மை அருட்சாதனமும் வழங்கப்பட்டது.

By admin