யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் வழிநடத்தலில் கல்லூரியின் கத்தோலிக்க மாணவர் மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் மதுரம் சதுக்கத்தில் வழிபாடும் தொடர்ந்து ஆரம்பப் பிரிவு, மத்தியூஸ் வீதி, சென் பற்றிக்ஸ் வீதி ஊடான அன்னையின் திருச்சொருப பவனியும் நடைபெற்றன.
பவனி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் பக்தியுடன் பங்குபற்றினர்.

