கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில், கேம்பிரிட்ஜ் ஆங்கிலக் கல்வியின் ஆரம்பநிலை மற்றும் முன்னேற்றநிலை ஆகிய பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பநிலைப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய 21 மாணவர்களில் 16 மாணவர்களும், முன்னேற்ற நிலைப் பிரிவில் தோற்றிய 7 மாணவர்களில் 5 மாணவர்களும் கௌவிக்கப்பட்டனர்.
சலேசிய உப மாகாண கேம்பிரிட்ஜ் இணைப்பாளர் அருட்தந்தை யேசுதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இரணைமாதாநகர் அ.த.க பாடசாலை அதிபர் றொபேட் கெனடி மற்றும் நாச்சிக்குடா பாடசாலை அதிபர் றொபேட் மேரி றொக்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கேம்பிரிட்ஜ் அகடமியில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.

