இலங்கை கைத்தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகள், பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 2025/26ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 அமைப்புகளுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க அவர்களிடமிருந்து விசேட திறமைக்கான விருதை சண்டிலிப்பாய் கோட்டத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பெற்றுக்கொண்டது.

By admin