வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். மாவட்ட பண்பாட்டுப் பேரவையும், மாவட்டச் செயலகமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக நுழைவாயிலில் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” நூல் வெளியீடும் பிரதேச செயலக ரீதியாக “யாழ் முத்து” மற்றும் “இளங்கலைஞர்” விருதுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற நிர்வாக உறுப்பினரும் கலைஞருமான திரு. காராளசிங்கம் சுரேன் அவர்களும் நாடகத்துறை வளர்ச்சிக்கான ‘இளங்கலைஞர்’ விருதை பெற்றுக்கொண்டார்.

