மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து சில்லாலை மற்றும் உடுவில் பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பாசறை ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் மற்றும் மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் அவர்கள் வளவாளராக கலந்து விளையாட்டுக்கள், கலந்துரையாடல், குழுச்செயற்பாடுகள் என்பவற்றின் ஊடாக சிறுவர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 70ற்கும் அதிகமான சிறுவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin