மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் 2017ஆம் ஆண்டு தரம் 05இல் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள், கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, அன்பளிப்பு பரிமாற்றம் என்பன இடம்பெற்றன.

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முன்னைநாள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

By admin