உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு, ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் 2026ஆம் ஆண்டு தேசிய மறைக்கல்வித் தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 12 மாணவர்களுக்கான தங்கப் பதக்கங்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து ஆலய வளாகத்தில் மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கு மக்களால் மரக்கறி, இறைச்சி, தேங்காய், பலசரக்கு பொருட்கள், திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் பியன் உற்பத்தி பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

By admin