யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன.

மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, மாதகல் சென் ஜோசப் கல்லூரி, அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை, ஊர்காவற்துறை புனித மரியாள் றோ.க. மகளிர் வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம், பருத்தித்துறை புனித தோமையார் றோ.க பெண்கள் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, அச்சுவேலி சென். திரேசாள் மகளிர் கல்லூரி, பளை இந்து ஆரம்ப பாடசாலை, கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயம், வலைப்பாடு றோ.க.த.க பாடசாலை, இரணைதீவு றோ.க.த.க பாடசாலை, முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம், புதுக்குடியிருப்பு றோ.க. பாடசாலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இச்செயலமர்வுகளில் 800ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin