கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய இளையோர், பீடப்பணியாளர்கள், பக்தி சபையினர், அருட்பணி சபையினர் இணைந்து கற்றல் உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், காலை உணவு, குளிர்பானங்கள், மரக்கறி வகைகள் மற்றும் தேங்காய் என்பவற்றை விற்பனை செய்தனர்.

இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்றைய தினம் பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து முதியோருக்கான ஒன்றுகூடலும் கௌரவிப்பும் இடம்பெற்றன.

By admin