பெல்ஜியம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ட்வெர்பன் நகரில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அருட்தந்தை ஆபிரகாம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

திருப்பலியை அருட்தந்தை ஆபிரகாம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்துடன் இத்திருப்பலியில் அருட்தந்தை மைக்கல் ஜோன் மற்றும் அருட்தந்தை சதீஸ் கிளமன்ற் ஆகியோரும் இணைந்து செபித்தனர்.

இந்நிகழ்வில் பெல்ஜியம் வாழ் புலம்பெயர் தமிழ் கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.

By admin