ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி காண்டீபன் தவச்செல்வி மற்றும் செல்வி சர்வேஸ்வரன் கம்சிகா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியை முன்பள்ளி போசகரும் சுன்னாகம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் மற்றும் புனித இசிதோர் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி சந்திரகலா ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.
இந்நிகழ்வில் சிறார்களின் கைவண்ணத்தால் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

