யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, அனுபவ பகிர்வு என்பவற்றுடன் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் கலந்து இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மாணவி செல்வி எனிற்ரோஸ் மற்றும் பயிற்சிவிப்பாளர் திரு வினோத்குமார் ஆகியோருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் ஓய்வு நிலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களென 60க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin