உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்கு பணிமனைக்கான அடிக்கல்லும் ஆயர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

