இளவாலை மயிலங்கூடல் புனித ஆரோக்கிய ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

அத்துடன் இளவாலை புனித யாகப்பர் ஆலய புனித வின்சன்ட் டி போல் பந்தி ஆரம்பிக்கப்பட்டதன் 10ஆம் ஆண்டு நினைவும் பாதுகாவலர் திருவிழாவும் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அன்றைய நாளை சிறப்பித்து ஐப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சபையினருக்கான ஒன்றுகூடலும் மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

By admin