யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

