திருகோணமலை மறைமாவட்ட குரு அருட்தந்தை பிலிப் அவர்கள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1952ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்து 1978ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயம் மற்றும் திருகோணமலை புனித மரியாள் பேராலய உதவிப்பங்குத்தந்தையாகவும் அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை ஆலய பதில் பங்குத்தந்தையாகவும் அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆயித்தியமலை, புல்லுமலை திருத்தலங்கள், நிலாவெளி பங்கு, குச்சவெளி பங்கு, கல்முனை திரு இருதய ஆண்டவர் ஆலயம், சொறிக்கல் முனை திருச்சிலுவை திருத்தலம், வாழைச்சேனை புனித திரேசாள் ஆலயம், தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், மூதூர் இருதயபுரம் பங்கு, திருகோணமலை இறையிரக்க திருத்தலம் ஆகியவற்றின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கல்முனை மறைக்கோட்ட முதல்வராகவும் மறைமாவட்ட மரியாயின் சேனை மற்றும் புனித வின்சென்டி போல் மத்திய சபை ஆன்மீக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin