மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி விழா 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் ஒரு கட்டமாக வவுனியா மறைக்கோட்டத்தில் புதுப்பித்தல் தியானங்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் வவுனியா பங்குத்தந்தையுமான அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இக்கருத்தமர்வை இந்தியாவிலிருந்து வருகை தந்த அருட்தந்தை இருதயராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 60 மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin