உடுப்புக்குளம் பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் முகமாலை புனித வேளாங்கன்னி அன்னை ஆலயம், யாழ். புனித மரியன்னை பேராலயம், புனித மடுத்தீனார் சிறிய குருமடம், மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை கடற்பகுதி, இளவாலை நட்புமண் பூங்கா, ஜம்புகோள பட்டினம், மாதகல் புனித லூர்து அன்னை கெபி ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 22 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin