பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட வலுதூக்கல் போட்டி புரட்டாதி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். அனலைதீவு சதாசிவம் பாடசாலை மாணவன் செல்வன் தனோயன் 17 வயது ஆண்களுக்கான 102 கிலோகிராம் எடை பிரிவில் முதலாமிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தையும் யாழ். முத்துதம்பி மகாவித்தியாலய மாணவன் செல்வன் பிரதீப் 20 வயது ஆண்களுக்கான 102 கிலோகிராம் எடை பிரிவிலும் யாழ். சென்ஜேம்ஸ் மகளிர் கல்லூரி மாணவி செல்வி தெபோரா 17 வயது பெண்களுக்கான 71 கிலோகிராம் எடை பிரிவிலும் இரண்டாமிடங்களை பெற்று வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவிகளான செல்வி கபினயா 17 வயது பெண்களுக்கான 87 கிலோகிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவிலும் செல்வி மரியதிலக்ஸி 20 வயது பிரிவு பெண்களுக்கான 81 கிலோகிராம் எடைப்பிரிவிலும் மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி விந்துஸா கஜேந்திரன் 17 வயது பெண்களுக்கான 81 கிலோகிராம் எடை பிரிவிலும் மூன்றாமிடங்களை வென்று வெண்கலப்பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

