இளவாலை புனித யாகப்பர் ஆலய எழுச்சியகம் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி மற்றும் சந்தை நிகழ்வு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எழுச்சியக் காப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உணவுப்பொருட்கள், மரக்கறி, பழங்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் எழுச்சியக ஸ்தாபர் திரு. கொர்னேலியஸ் ஜெயரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் இறைபதடைந்த அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றெஜினி யூட் அவலின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு திருப்பலி புரட்டாதி மாதம் 21ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

