எழுவைதீவு புனித தோமையார் ஆலய குழந்தை திரேசா யுவதிகள் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மன்ற திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை மன்றத்தினரால் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நடனம், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் போன்ற கலைநிகழ்வுகளும் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

