சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுவிஸ்வாழ் கத்தோலிக்க இளையோருக்கான வருடாந்த ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓல்ரன் நகரில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் வழிநடத்தலில் இளையோர் பொறுப்பாளர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், கலந்துரையாடல், சிறப்பு திருப்பலி என்பன நடைபெற்றன.

இக்கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் மற்றும் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 90க்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin