மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ், சிறிய குருமட அதிபர் அருட்தந்தை சுகந்தன், திருப்பாலத்துவ சபை இயக்குநர் அருட்தந்தை வின்செஸ்லோஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் நற்கருணை வழிபாடும் கார்மேல் பற்றிமா கல்லூரி மண்டபம் வரையான நடைபவனியும் நடைபெற்றன.
தொடர்ந்து மண்டபத்தில் திருப்பாலத்துவ சபை சிறார்களின் கலைநிகழ்வுகளும் இறை அழைத்தல் ஊக்குவிப்பு கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், திருப்பாலத்துவ சபை சிறார்கள், ஊக்குவிப்பாளர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

