மட்டக்களப்பு, கிரான் “கிறிஸ்த சேவ ஆச்சிரமம்”ஆரம்பிக்கப்பட்டதன் ‘68ஆம் ஆண்டு அருள் விழாவும் ஆண்டு விழாவும்’ புரட்டாதி மாதம் 11, 12ஆம் திகதிகளில் கிரான் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.

ஆச்சிரமத் தலைவர் ஜெறோம் அண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் நாள், மாலை திருமுழுக்கு வழிபாடுடன் மெதடிஸ்த திருஅவைக் கோமாரி சபைக் குருவானவர் அருட்பணியாளர் சசிகுமார் அவர்களின் மறையுரையும் தொடர்ந்து இரவு அருள் விழாவும் இடம்பெற்றன.

இரண்டாம் நாள் காலை நற்கருணை வழிபாடு, மற்றும் கதாப்பிரசங்கம் ஆகியவற்றை தென்னிந்திய திருச்சபையின் சென்னை மறைமாவட்டக் குருவானவர் அருட்பணியாளர் பிரான்சிஸ் ஞானசுந்தரமணி அவர்கள் நடத்தினார். மேலும், ஆச்சிரம வரலாறு ஜெரோம் அண்ணன் அவர்களால் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த அருட்பணியாளர்களும் இறைமக்களும் கலந்துகொண்டனர்.

By admin