செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரி மேரி நிறோஜினி அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை பரந்தன் செபமாலை கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரி மேரி நிறோஜினி அவர்கள் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.

இத்திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரிகளின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin