கிர்கிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் உலக வலுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
18 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கான வலுதூக்கல் போட்டியில், யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவி செல்வி எனிட்ரோஸ் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், உலக வலுதூக்கல் போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட இளையோர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது இதுவே முதல் தடவையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 23 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கான வலுதூக்கல் போட்டியில், யாழ். சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சாதனா இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் உலக வலுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.

