தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 05, 06ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளன்று மெழுகுவர்த்தி பவனி, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், மறைமாவட்ட இளையோர் வளவாளர்களின் தலைமைத்துவ பயிற்சி என்பன நடைபெற்றன.

இரண்டாம் நாள் இளையோர் பவனியும் தொடர்ந்து அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் இடம்பெற்றன.

திருப்பலி நிறைவில் யாழ். அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெறாட் அவர்களின் ‘நம்முள் தொலைந்த இளமை : ஒரு மீள்தேடலின் பயணம்’ என்னும் தலைப்பிலான கருத்துரை, திரு. பாஸ்கரன் அவர்களின் பாதுகாப்பான புலம்பெயர்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தமர்வு, மறைமாவட்ட இளையோர் வளவாளர்களின் தலைமைத்து வகிபாகம் பற்றிய கருத்துரை என்பவற்றுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 240 இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin