கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய பங்குமக்களையும் மறைக்கல்வி மாணவர்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களும் மறைக்கல்வி மாணவர்களும் பதுளை நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 50 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

