உருத்திரபுரம் பங்கில் திருமண பந்தந்தில் இணைந்து 25ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து தம்பதியினருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

