சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாள் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய இயக்குநர் அருட்தந்தை இராபேல் கூத்தூர் அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து, திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், குடும்பங்களை மரியன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் வழிபாடு, 1000 மணிச்செபமாலை, குணமளிக்கும் ஆராதனை, நற்கருணை வழிபாடு, கன்னி மரியாளின் கண்காட்சி என்பவற்றின் ஊடாக நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகளும் பங்கு மக்களும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin