யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளவாலை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆவணி மாதம் 22ஆம் சனிக்கிழமை நடைபெற்றது.
மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன், அருட்தந்தை போல் அனக்கிளிற், தீவக அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ், திருமதி. டோமினிக், திருமதி. சுபாஜினி, திருமதி. நிமல்டா, செல்வி. ஜெதுஸானா ஆகியோர் இணைந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.
தொடர்ந்து மறைக்கோட்ட செயற்குழு மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் குழு தெரிவும் இடம்பெற்றது.
செயற்குழு தெரிவில் பெரியாவிளான் பங்கைச் சேர்ந்த திருமதி. நிமல்டா, அவர்கள் செயலாளராகவும் பண்டத்தரிப்பு பங்கைச் சேர்ந்த திருமதி. சியாமளா, அவர்கள் பொருளாளராகவும் உரும்பிராய் பங்கைச் சேர்ந்த திருமதி. சுபாசினி அவர்கள் உப செயலாளராகவும் ஆனைக்கோட்டை பங்கைச் சேர்ந்த திரு. கீர்தபொன்கலன் அவர்கள் உப பொருளாளராகவும் மாரீசன்கூடல் பங்கை சேர்ந்த திரு. விதுசன் அவர்கள் ஊடக உதவியாளராகவும் அன்புக்கன்னியர் சபை அருட்சகோதரி கிறின்சி அவர்கள் துறவற சபை பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 84 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

