மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனையினர் யாழ். மறைமாவட்டம் முல்லைத்தீவு மறைக்கோட்டத்தை தரிசித்து முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களுடன் இணைந்து இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களால் “முள்ளிவாய்க்கால் ஆன்மீகம்” என்னும் தலைப்பில் ஆன்மீக உரையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சேனையினர் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம், முள்ளிவாய்க்கால், அளம்பில் சுவாமி தோட்டம் என்பவற்றை பார்வையிட்டனர்.

அத்துடன் அன்று மாலை சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் மற்றும் முல்லைத்தீவு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட பங்கு பிரசீடியங்களை சேர்ந்த 600ற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin