யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 21,22,23ஆம் திகதிகளில் நடைபெற்றது.
உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயம், கனகபுரம் புனித யூதா ஆலயம் மற்றும் சிவநகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், குடும்ப ஆற்றுப்படுத்தல்கள், சிறப்பு வழிபாடுகள், திருப்பலி என்பவை நடைபெற்றன.
இவ் ஆற்றுப்படுத்தல் நிகழ்வை அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட், திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரிகள் கலா, மொறின், அகிலா, நிஸாந்தினி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.

