இலங்கை ரெனிஸ் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் யாழ். பிளமிங்கோஸ் அணியின் தூதராக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் நிகேதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெனிஸ் விளையாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுட்டு வரும் செல்வன் நிகேதன் யாழ்ப்பாணத்தில் வழமையான பயிற்சிகளை மேற்கொள்வதுடன், ஒவ்வொரு மாதமும் கொழும்பு சென்று சுமார் ஒரு வாரம் சிறப்புப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவரின் சிறப்பு திறன் காரணமாக, 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இலங்கையின் முதல் 70 தரவரிசைக்குள் 10 வயது மாணவன் செல்வன் நிகேதன் இடம்பிடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வட மாகாண கல்வி திணைக்களமும் Yarl IT Hub நிறுவனமும் இணைந்து வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுத்த Robotic & Innovation போட்டி ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் திவ்யன் அவர்கள் Non-Digital Solution பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

By admin